சாக்கு மூட்டைக்குள் பெண்ணின் சடலம்.
வாழைச்சேனை வர்த்தக நிலையமொன்றில் சாக்கு மூடையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தில் சந்தேகத்திற்குரிய விதத்தில் இரண்டு சாக்கு மூடைகள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது பெண்ணின் சடலம் மூடைக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வாழைச்சேனை பகுதியில் காணாமல் போன 55 வயதான பெண்ணின் சடலமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
காணாமல் போன பெண் வங்கிக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளதுடன், வீடு திரும்பாத காரணத்தினால் அவரின் குடும்பத்தினர் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரும், முச்சக்கர வண்டி சாரதியொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பெண்ணின் மரணம் தொடர்பில் நீதிவான் பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை என்பன இன்று நடைபெறவுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.
Post a Comment