Header Ads

test

நாட்டை முடக்குவது தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.

 நாட்டை முடக்குவதற்கு எவ்விதத் தீர்மானமும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். கொவிட் நெருக்கடியைக் கையாள்வதற்கான இறுதி அஸ்திரமாக அதனை வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். எனினும், கொவிட் நெருக்கடியைக் கையாளும்போது அவ்வாறான தீர்மானத்தை எந்த சந்தர்ப்பத்தில் எடுக்க வேண்டும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர்  தெரிவித்தார்.

மேலும், கொவிட் நெருக்கடியைக் கையாள்வதற்கு சிறந்த வழி தடுப்பூசி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் ச்டுதியாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் நாட்டை முடக்குமாறு சுகாதார தரப்பினர் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


1 comment:

  1. என்ன செய்ய எல்லாம் விதி

    ReplyDelete