இராணுவ தளபதியின் மற்றுமொரு அறிவிப்பு.
இலங்கை அரசாங்கம் மற்றுமொரு அவசர அறிவிப்பை நேற்று மாலை வெளியிட்டுள்ளது.
அதன்படி நேற்று இரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதோடு எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் பொதுமக்களுக்கு முன் தடுப்பூசி அட்டை வழங்கப்படும் என்றும் அதன் பின்னர் அந்த அட்டையின்றி பொது இடங்களுக்கு செல்வது தடைசெய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் அத்தியாவசிய சேவை தொழிலாளர்கள், சுகாதாரம், ஆடை மற்றும் விவசாயத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
மேலும் , சுகாதார நெறிமுறைகள் அடங்கிய அறிவிப்புக்களுக்கமைய பொதுமக்களின் செயற்பாடுகள் கடுமையாக கண்காணிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.
Post a Comment