Header Ads

test

சொந்தம் கொண்டாடும் சோம்பேறி உன் நண்பனல்ல - பளையூர் பரா.

 விழிதிற மகனே.!!!

மகனே! உன் இளமைக்காலம் உன் வளமென்று கொள்

செக்கனும் நிமிடங்களும் உன்னை செதுக்கிடும் காலம்

தக்கன கண்டு துணிவுடன் வென்று எக்கணமும் உன் திறனதை வளர்த்து சிக்கெனப் பிடித்து சிகரத்தைத் தொடு.

பக்கத்தில் இருக்கும் நண்பன் யாரெனப் பார்.

வக்கற்று வழியற்று வந்ததெல்லாம் தனதென்று

சொந்தம் கொண்டாடும் சோம்பேறி உன் நண்பனல்ல.

கண்டதையும் அருந்தி உண்டு பெருத்து உறங்கியெழுபவனும் உன் நண்பனல்ல.

சண்டையே வாழ்வென சந்தியில் நிற்பவன் உன் நண்பனல்ல.

கொண்டதே கோலம் கண்டதே காட்சி என அரண்டு பிடிப்பவனும் உன் நண்பனல்ல.

காலை முதல் மாலை வரை கடின உழைப்பால் உன்னருகில் இருப்பவனே உன் உண்மை நண்பன்.

காலிடறி நீ கானல் நீரில் விழும்போது உன் கைபிடித்து தூக்குபவன் உன் உண்மை நண்பன்.

வாழ வழியற்று இருக்கும் போது வழிசொல்லித் தருபவன் உண்மை நண்பன்.

நீளும் கலியுகத்தில் நிற்கும் கொடுமையிலே நாளும் நற்செயல்கள் செய்தெம் தேசம் அழியாது தெரிந்த வழிகாட்டி பாசம் காட்டி பரிவுடன் உனை அணைத்து ஆசை குறைத்து அவனியில் வாழும் திசை காட்டி அவனே உன் நண்பன்.

முப்பாட்டன் காத்த முதுசம் எங்கள் எப்போதும் மாறாத கலாசார பண்புகள் தப்பித் தவறியும் தடம் புரண்டு போகாமல் பற்றோடு அதைப் பேணிஅடுத்த சந்ததிக்கு கொடுக்கின்ற அன்பான நண்பனே உன் நண்பன்.

பண்போடு வாழ்ந்து விழிதிறந்து பார் நீ விண்ணைத் தொடுவாய்.

     - பளையூர் பரா.


No comments