Header Ads

test

பாழடைந்த கிணற்றிலிருந்து சடலம் மீட்பு.

 திருகோணமலை -10 ம் கட்டை கித்துல் உதுவ பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று (03) மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காலி - ஹபராதுவ பிரதேசத்திலிருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பத்தாம் கட்டை பகுதிக்கு வருகை தந்து வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த குறித்த நபர் திங்கட்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையில் கிணற்றிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த பந்துல சிறிய பதிரன (67 வயது) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments