இலங்கையில் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பலர் கொவிட் தொற்றால் மரணம்.
இலங்கையில் தடுப்பூசி பெற்றுக் கொண்ட 49 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி இரண்டையும் பெற்றுக் கொண்ட 9 பேரும் ஒரு தடுப்பூசி பெற்றுக் கொண்ட 40 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கொவிட் தொடர்பான தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அனவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி இரண்டையும் பெற்றுக் கொண்ட 9 பேருக்கும் உடலில் வேறு பாதிப்புகள் இருந்தமையே மரணத்திற்கு காரணமாகியுள்ளதென பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அதற்குள் பிரதான நோயாக சக்கர நோயாக உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது உயிரிழந்தவர்களில் 3524 பேர் தடுப்பூசி பெறாதவர்கள் என தெரியவந்துள்ளது.
Post a Comment