தனிமைப்படுத்தப்பட்டுள்ள யாழ் அரசாங்க அதிபர் க.மகேசன்.
அலுவலக உதவியாளர் ஒருவருக்குக் கொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில் யாழ் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மாவட்ட அரச அதிபரின் பணிக்குழாமிலுள்ள அலுவலக உதவியாளர் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, சங்கானை பிரதேச செயலர் திருமதி பிரேமினிக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சங்கானை பிரதேச செயலர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சென்றபோது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment