Header Ads

test

அரச உத்தியோகத்தரை கடமைக்கு அழைத்தல் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.

 தற்போதைய கொவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் இன்று அரச ஊழியர்களை சேவைக்கு திருப்பி அழைத்துள்ள அரசின் முடிவினால், அரச துறை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் சிரமத்திற்குள்ளாகுவார்கள் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

ஏனெனில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டதாக அரசாங்கம் கூறினாலும், அது உண்மை இல்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்நிலையில் பொதுப் போக்குவரத்து மற்றும் அலுவலகத்தில் வைரஸ் பரவாமல் இருக்க பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரையின் அடிப்படையில், அனைத்து அரச துறை ஊழியர்களையும் பணிக்கு அழைக்க ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக உபுல் ரோஹண தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இம்முடிவுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உடன்படவில்லை என்றும், மேற்படி தீர்மானத்தை எடுக்கும் போது, ​​முக்கியமான விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் கொவிட் -19 க்கு எதிராக அரச துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டாலும், பெரும்பான்மையானவர்கள் ஒரு டோஸ் மட்டுமே பெற்றுள்ளனர் என்றும், அது முழுமை யான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்காது என்றும் பெரும்பாலான ஊழியர்களின் குடும்பங்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தடுப்பூசி போடாதவர்கள் வேலை நோக்கங்களுக்காக கொழும்பு மற்றும் பிற நெரிசலான பகுதிகளுக்குச் சென்று வீடு திரும்புவார்கள் என்றும் இதனால் குடும்ப உறுப்பினர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இது தொடர்பில் கவனிக்கப்படவில்லை என்பதனால் மேற்படி முடிவானது பேரழிவு தரும் முடிவுகளுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


No comments