கொவிட் தொற்றால் யாழில் மேலும் ஐவர் உயிரிழப்பு.
யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதடியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்புத் துறையைச் சேர்ந்த 79 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தூரைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் கோண்டாவைிலைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரும் என 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
Post a Comment