காதலி மற்றும் மகளை கொடூரமாக கொன்ற நபர் கைது.
வவுனியா, மருதன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் தனது 6 மாத மகள் மற்றும் காதலியை கொடூரமாக கொன்ற நபரை ஆறு வருடங்களுக்குப் பிறகு அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.
இத்தகவலை வவுனியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதியை காதலித்து கர்ப்பமாக்கி, திருமணம் செய்வதாக அழைத்து சென்று இந்த கொடூரத்தை புரிந்துள்ளார்.
2015 ஓகஸ்ட் முதல் காணாமல் போன யுவதி மற்றும் குழந்தையின் உறவினர்கள் கிளிநொச்சியில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இது தொடர்பான விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 28 வயதான சந்தேக நபர் கொலைக்குப் பிறகு இரண்டு முறை வெளிநாட்டிற்கு சென்று வவுனியாவுக்குத் திரும்பியதை விசாரணையின் போது ஒப்புக்கொண்டார்.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் ஒப்பந்தத்திற்காக சென்றபோது, அந்தப்பகுதியில் உள்ள 19 வயதான யுவதிடன் திருமணத்திற்கு முன் உறவு வைத்திருந்தார்.
இதனால் அந்தப் பெண் கர்ப்பமாகி விட்டார். இது பெண்ணின் உறவினர்களிற்கு தெரிய வந்ததையடுத்து, யுவதிக்கு பிரசவமான பின்னர் திருமணம் செய்வதாக கூறி, வவுனியாவிலுள்ள தனது வீட்டிற்கு 2015 ஓகஸ்ட் 9ஆம் திகதி அழைத்து சென்றுள்ளார்.
அங்கு பிரசவமான பின்னர் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் காதலியையும் கொலை செய்து, உடல்களை தென்னை மட்டை, மண்ணெண்ணெய், சீனியை பயன்படுத்தி எரித்துள்ளார்.
எஞ்சிய பாகங்களை தோட்டத்தில் புதைத்துள்ளார். யாழ்ப்பாணம் கோண்டாவிலை 20 வயதுடைய பரமேஸ்வரன் சஜிந்திகா மற்றும் ஆறு மாத குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.
Post a Comment