யாழில் மருத்துவர் உட்பட மூவர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு.
யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உள்ளிட்ட மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர்.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளையில் மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர்களில் ஒருவரான நல்லூரைச் சேர்ந்த 72 வயதுடையவரே கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாயைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரும், உரும்பிராயைச் சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர் களின் மொத்த எண்ணிக்கை 227ஆக உயர்வடைந்துள்ளது.
Post a Comment