யாழில் தொடரும் வாழ் வெட்டுக்கள் - அச்சத்தில் மக்கள்.
யாழ்.சுன்னாகம் - தொட்டியாலடி பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றிருப்பதாக சுன்னாகம் பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
தாக்குதல் இடம்பெற்ற வீட்டிற்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டின் உரிமையாளருடைய பெயரை கூறி அழைத்ததாகவும் இதன்போது குறுக்கே வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு வீட்டின் உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது குறுக்கே வந்த உரிமையாளரின் மாமனாரும் காயமடைந்த நிலையில் இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
Post a Comment