எரி பொருள் விலை தொடர்பில் வெளிந்த புதிய தகவல்.
சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை திடீரென சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை திடீரென சரிந்துள்ள நிலையில் இலங்கையில் எரிபொருளுக்கான விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே.
ரஞ்சித் விதானகே கடிதம் மூலம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 73.95 டொலராக இருந்துவந்த நிலையில், தற்போது அதன் விலை 62.14 டொலராக சாரிந்துள்ளதெனவும், இதனால் இலங்கையிலும் எரிபொருளுக்கான விலையை குறைக்க முடியுமெனவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment