சுவர் இடிந்து வீழ்ந்ததால் பரிதாபகரமாக உயிரிழந்த சிறுவன்.
வவுனியா, பம்பைமடு - பெரியக்கட்டு பிரதேசத்தில் பாதுகாப்பற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்த சுவர் ஒன்றிலிருந்து சில சீமெந்து கற்கள் சரிந்து விழுந்ததால் பலத்த காயங்களுக்கு உள்ளான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகட்டு பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்றரை வயதான சிறுவன் நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளான்.விலங்கு வளர்ப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையின் சுவரின் சில கற்கள் சரிந்து, வீட்டு வாசலில் இருந்த சிறுவன் மீது விழுந்ததாக வீட்டார் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுவனின் சரீரம் மீதான பிரேத பரிசோதனை வவுனியா வைத்தியசாலையில் இடம்பெறவிருந்த அதேவேளை, பூவரசன்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment