நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் வலியுறுத்திய அரசியல் தலைவர் மங்கள சமரவீர - முன்னாள் எம்பி சந்திரகுமார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் அமரர் மங்கள சமரவீர இந்த நாட்டில்
இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் வலியுறுத்திய ஒருநல்ல அரசியல் தலைவர். அவரின் இழப்பு நாட்டின் அனைத்து சமூகங்களுக்குமான
இழப்பு.
இனவாதிகள் அதிகமுள்ள இந் நாட்டில் மங்கள சமவீர போன்ற தலைவர்களே
தேவையானவர்கள். சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அபிலாசைகளையும்
பிரச்சினைகளையும் பெரும்பான்மை சமூகங்களும் அச் சமூகத்தின்
பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்ளாது விட்டால் நாட்டில் ஒரு போதும் அமைதி
ஏற்படாது என தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த ஒரு அரசியல் தலைவரை நாடு இந்த
நேரத்தில் இழந்திருப்பது மிகவும் துரதிஸ்டமானது. என முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார்
தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Post a Comment