Header Ads

test

இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டம் தொடர்பில் அஜித் ரோஹண விளக்கம்.

நாட்டில் இன்று முதல் முகக் கவசத்தை அணியாத மற்றும் உரிய வகையில் அணியாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கைது செய்யப்படும் நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments