Header Ads

test

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.

 ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை வெளிக்கள ஊழியர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி இம்மாதம் இறுதியில் வழங்கப்பட்டு பின்னர் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை வெளிக்கள ஊழியர்களில் 83 சதவீதமானோருக்கு கோவிட் முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட தடுப்பூசி இம்மாதம் இறுதி வாரத்தில் வழங்கப்படும்.இதன் பின்னர் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்க எதிர்பார்த்துள்ளோம். ஆகவே அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை வெளிக்கள சேவையாளர்கள் பாடசாலைகளை திறப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பாடசாலைகளை மீள திறக்க அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. ஆசிரியர்களுக்கும், பாடசாலை வெளிக்கள சேவையாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்போது வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை வெளிக்கள சேவையாளர்களில் 83 சதவீதமானவர்களுக்கு கோவிட் முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன.இம்மாதத்தின் இறுதி வாரத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அரச சேவையாளர்கள் அனைவரும் இன்று முதல் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் மாதம் முதல் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 


No comments