ஆடைத்தொழிற்சாலைக்கு சென்ற பெண்ணுக்கு நடந்த துயரம்.
திருகோணமலை - ஹொரவபொத்தானை பிரதான வீதியின் திரியாய் சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர், தம்பலகாமம் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றிற்கு பணிக்கு செல்வதற்காக மற்றுமொரு பெண்ணுடன் உந்துருளியொன்றில் பயணித்துள்ளார்.குறித்த உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் மயிலங்குடா பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவராவார்.
அத்துடன் காயமடைந்த மற்றுமொரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment