Header Ads

test

வவுனியாவில் மருத்துவர்கள் மற்றும் இராணுவ வீரர்களை தொற்றியுள்ள கொவிட் வைரஸ்.

 வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவர்கள் உட்பட 76 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா வடக்கு, தெற்கு, செட்டிகுளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தன.

அந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் இரண்டு வைத்தியர்கள் மற்றும் இராணுவவீரர் உட்பட 76 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து, அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதுடன், தொற்று உறுதியானவர்களை கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


No comments