யாழில் நீராடுவதற்காக கடலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு.
யாழில் நீராடுவதற்காக கடலுக்குச் சென்ற வயோதிபர் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறை, உதயபுரம் கடலுக்கு அதிகாலை குளிக்கச் சென்ற முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்குச் குளிக்கச் சென்ற இவர் நீண்ட நேரமாகியும் காணாத நிலையில், காலை சடலமாக கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயதான மனுவேல் செபஸ்டியன் என இனங்காணப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment