Header Ads

test

முச்சக்கர வண்டிச் சாரதிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதி சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண.

இரவு நேரங்களில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சாரதிகள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று அநுராதபுரத்தில் இரவு நேரத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் சாரதியை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நாட்டில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


No comments