காத்தான்குடியில் ஏற்பட்ட கோர விபத்து.
காத்தான்குடி பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் மூன்று வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக அப்பகுதியில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
காத்தான்குடி பிரதான வீதி, பெரிய மௌலானா பள்ளிவாயலுக்கு முன்னால் ஏற்பட்ட விபத்தில் 3 வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதுடன் வீதியின் நடுவே நடப்பட்டிருந்த பூச்செடி ஒன்றும் உடைந்து சேதம் ஆகியுள்ளது.
இவ்விபத்துச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment