Header Ads

test

இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் படுகாயம்.

 மட்டக்களப்பு கரடியனாறு பகுதில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இன்று புதன்கிழமை (18) காலையில் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

இன்று காலை சுமார் 7 மணியளவில்  மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தன்குமாரவேளி ஆற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது அங்கு சிவில் உடையில் சென்ற இராணுவத்தினர் துப்பாகக்கிபிரயோகம் நடாத்தியுள்ளனர்.

  சம்பவத்தில் மண்அகழ்வில் ஈடுபட்ட 26 வயதுடைய முருகையா சசிக்குமார் என்பவரே   படுகாயமடைந்துள்ளார் .

படுகாயமடைந்தவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர். 


No comments