இலங்கையில் இரு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்ற பலர் கொவிட் தொற்றால் மரணம்.
இலங்கையில் கொரோனா வைரஸிற்கு எதிரா இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்த போது கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
அதன்படி , இதுவரை இரு தடுப்பூசியையும் பெற்ற 23 பேர் இவ்வாறு உயிரிழந்திருப்பதாகவும் எனினும் அவர்கள் பல்வேறுபட்ட தொற்றா நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரண்டு கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றைப் பெற்றிருந்த போது கொரோனா தொற்றுக்கு ஆளாகிய 177 பேர் இதுவரை பலியாகியிருப்பதாகவும் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
Post a Comment