சமூக வலைத்தளங்களால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு.
சமூக வலைத்தளங்களில் உள்ள உணவுகள் மற்றும் மருந்துகளை வைத்தியரின் பரிந்துரையின்றி பயன்படுத்துவதனை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொவிட் வைரஸிடம் இருந்து பாதுகாத்து கொள்ளக்கூடிய உணவுகள் என சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் எப்போதும் வைத்திய பரிந்துரைக்கமைய செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றிற்காக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு மற்றும் மருந்து பலவற்றை சமூக வலைத்தளங்களில் அவதானிக்க முடிந்தது.
இவ்வாறான உணவுகள் மற்றும் மருந்துகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். அவற்றில் எது உண்மையானது பொய்யானது என தெரியவில்லை. எனவே அவற்றினை பெற முன்னர் கட்டாயமாக வைத்தியரின் ஆலோசனைகளை பெற்றிருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment