இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை பச்சோந்தி.
புத்தளம் - பாலவியா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் அரிய வகை பச்சோந்தி கண்டுபிடிக்கப்பட்டதாக புத்தளம் வனவிலங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
வறண்ட பகுதிகளில் வாழும் ஒரு அரிய வகை பச்சோந்தியே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த நாட்களில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக தண்ணீர் மற்றும் உணவு தேடி அவை வீடுகளுக்கு வருவதாக கூறப்படுகின்றது.
இந்த பச்சோந்தி வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வண்ணங்களை கொண்டுள்ளதாகவும், அதன் நாசி வட்டமானது என்றும் அதன் கால்கள் சிறப்பானது எனவும் வனவிலங்கு அதிகாரிகள் கூறுகின்றனர்.
உள்ளூர் மக்களின் விழிப்புணர்வின் பேரில், பச்சோந்தியை பாதுகாப்பாக மீட்டெடுத்த வனவிலங்கு அதிகாரிகள், அதனை தபோவா சரணாலயத்தில் விடுவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
Post a Comment