Header Ads

test

ஜனாதிபதி கோட்டபாயவின் விசேட உத்தரவு.

 இந்த நாட்டு மக்களுக்கு மூன்றாம் டோஸ் தடுப்பூசி அல்லது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கொரோனா ஒழிப்பு செயலணியுடன் இடம்பெற்றதாகவும் இராணுவத்தளபதி இன்று காலை தெரிவித்தார்.

ஒரு சில நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துகின்றன. எங்கள் நாட்டுக்கும் இது வேண்டும் என்றால் நிச்சயம் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

இதற்கு தேவையான அளவைப் பெற உடனடியாக கோரிக்கை விடுங்கள் என்றார்.

மேலும், நீங்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி கொடுக்க விரும்பினால் விரைவில் விண்ணப்பிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, நாட்டில் 93 சதவீத மக்களுக்கு முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 23 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது.


No comments