இலங்கையில் 45 ஆயிரம் சிறுவர்களுக்கு கொவிட் தொற்று.
இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களில் சுமார் 45 ஆயிரம் பேர் குழந்தைகள் என லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் நளீன் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.
இவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், குழந்தைகளுக்கு இடையில் மிகவும் வேகமாக கொரோனா தொற்று பரவி வருவதாகவும், ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வார்டு நிரம்பி உள்ளதாகவும் வைத்தியர் நளீன் கிதுல்வத்த குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment