யாழ்ப்பாணத்தில் மேலும் 4 பேர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களான திருநெல்வேலி மேற்கைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரும், சண்டிலிப்பாயைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊடாக பி.சி.ஆர். பரிசோதனைக்காக மாதிரி அனுப்பப்பட்ட 62 வயதுடைய ஆண் ஒருவருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக பி.சி.ஆர். பரிசோதனைக்காக மாதிரி அனுப்பப்பட்ட 65 வயதுடைய ஆண் ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.
Post a Comment