தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட 200 பேர் இலங்கையில் பரிதாபகரமாக உயிரிழப்பு.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக இலங்கையில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட 200 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில் ஏதேனும் ஒரு வர்க்கத்தை சேர்ந்த தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்க்களில் 200 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இவர்களில் 177 பேர் ஏதேனும் ஒரு தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் என்பதுடன் கொரோனா மரணங்களில் இது 3.38 வீத பதிவாகும் எனவும், இரண்டு தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment