Header Ads

test

13.08.2021 இன்றைய நாள் எப்படி.

 மேஷ ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழிபாடு செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்ய நேரிடும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். சிவபெருமானை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்படும்.


ரிஷப ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ஷண்முகக் கடவுளை வழிபடுவதன் மூலம் சங்கடங்கள் குறையும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.


மிதுன ராசி அன்பர்களே!

மனதில் அவ்வப்போது இனம் தெரியாத சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வருகை செலவுகளை ஏற்படுத்தும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியில் செல்லும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில சிரமங்கள் ஏற்படும். விநாயகரை வழிபட தடைகள் விலகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாயின் உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.


கடக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவை. வேங்கடேசபெருமாளை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும்.


சிம்ம ராசி அன்பர்களே!

எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். வாழ்க்கைத் துணையால் எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்குத் திடீர் செலவுகள் ஏற்படக் கூடும். பிற்பகலுக்குமேல் மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொறுமை அவசியம். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அம்பிகை வழிபாடு நலம் தரும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கடன் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும்.


கன்னி ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த காரியம் தாமதமானாலும் முடிந்துவிடும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். தாயின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தாய் வழியில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, தீராமல் இருந்த பிரச்னை ஒன்று நல்லபடி முடியும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.


துலா ராசி அன்பர்களே!

தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். இன்று குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. கடன் விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நண்பர்களால் ஆதாயம் உண்டாக வாய்ப்பு உண்டு.


விருச்சிக ராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து ஈடுபடவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும். புதிய முயற்சிகள் சாதகமாகும். பிள்ளைகள் வகையில் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் வீண் செலவுகள் ஏற்படும். ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.


தனுசு ராசி அன்பர்களே!

மகிழ்ச்சி தரும் நாள். கணவன் - மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனை எப்போதும்போல் இருக்கும். விநாயகரை வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகள் மூலம் பணவரவு உண்டு.


மகர ராசி அன்பர்களே!

நீங்கள் உற்சாகமாக இருப்பதுடன் மற்றவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்துவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்கள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபட, பல வகைகளில் நன்மைகள் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.


கும்ப ராசி அன்பர்களே!

இன்று நினைத்த காரியத்தை எப்படியும் முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணை உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார். அவரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். நரசிம்மரை வழிபட கூடுதல் நன்மைகள் ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையால் சங்கடம் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.


மீன ராசி அன்பர்களே!

அனுகூலமான நாளாக இருக்கும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவும் பொருள் சேர்க்கையும் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பைரவர் வழிபாடு நலம் சேர்க்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகள் மூலம் பணவரவு உண்டு.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.


No comments