13 வயது அக்காவை கர்ப்பமாக்கிய தம்பி.
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயது அக்காவை 12 வயதுடைய தம்பி கர்ப்பமாக்கிய சம்பவம் இடம்பெற்றள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த 13 வயதுடைய சிறுமி வயிற்றுவலி காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் போது குறித்த சிறுமி கர்ப்பமாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் வைத்தியர்கள் வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிக்கை சமர்ப்பித்தமையினை அடுத்து ஒமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளில் தனது தம்பி தன்னை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியதாக சிறுமியளித்த வாக்குமூலத்தின் பிரகாரம் 12 வயதுடைய தம்பி ஓமந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது சூம் செயலிகள் மூலம் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறுவதினால் சிறுவர்கள் மத்தியில் தொலைபேசி பாவனை அதிகரித்து எனினும் பிள்ளைகளின் தொலைபேசிகள் தொடர்பில் பெற்றோர் கவனம் செலுத்தமையும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment