வவுனியா கனராயன்குளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு பொறுப்பு வைத்திய அதிகாரி M.மதிதரன் தலைமையில் கொவிட் தடுப்பூசி வழங்கல்.
வவுனியா கனகராயன்குளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கிராமங்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி இன்று வழங்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது -
கனகராயன்குளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் 30 வயதிற்கு மேட்பட்டவர்களுக்கான சைனாபாம் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் பொறுப்பு வைத்திய அதிகாரி M.மதிதரன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரி V. திலீபன் அவர்கள் கலந்துகொண்டதுடன், இத் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்றும் நாளையும் கனகராயன்குளம் அரசினர் வைத்தியசாலையில் இடம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொவிட் - 19 தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக அதிகளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment