ஐரோப்பிய நாடுகளிற்கு செல்ல முடியாத இலங்கையர்கள்.
இலங்கையில் கூடுதலாக பயன்படுத்தும் கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் மற்றும் ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் குறித்த இரண்டு தடுப்பூசிகளும் ஐரோப்பிய நாடுகளில் பாவனையில் இல்லை. இதற்கான அனுமதியினை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 4.8ஆக இருந்த வேலையின்மை தற்போது 5.5 வீதமாக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்த இலங்கையர்கள் பலரும் நாட்டிற்கு வந்த காரணத்தினால் இந்த வீத உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment