பவித்திரா வன்னியாராச்சியின் அதிரடி உத்தரவு.
போராட்டங்களில் ஈடுபடுவதை சிவில் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
இதில் ஜோசப் ஸ்டாலின், பியுமி ஹன்சமாலி ஆகியோர் மாத்திரம் விதிவிலக்கல்ல ஆகவே போராட்டங்களில் ஈடுபடுவதை சிவில் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பூகோள மட்டத்தில் தாக்கம் செலுத்தியுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் மருந்து இதுவரையில் உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை.
வைரஸ் தொற்று தொற்றாமல் இருப்பதற்காக மாத்திரமே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் எந்தளவிற்கு சாத்தியமாக அமையும் என்பது இதுவரையில் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றார்.
Post a Comment