பருத்துறையில் அதிகரித்துள்ள கொவிட் தொற்று.
யாழ்.பருத்தித்துறை நகரில் இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிபு தகவல்கள் தொிவிக்கின்றன.
பருத்தித்துறை நகரில் வர்த்தக, வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவோர் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் உட்பட சுமார் 395 பேருக்கு இன்று காலை முதல் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த - 07 பேர், மருதங்கேணியைச் சேர்ந்த - 02 பேர், கரவெட்டியைச் சேர்ந்த - 02 பேருமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பருத்தித்துறை நகர் கொத்தணியில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 81 இல் இருந்து 92 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment