யாழில் தீக்குச்சியால் பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் - உடல் கருகி பலி.
யாழ்ப்பாணம் - கட்டைக்காடு, முள்ளியானை பகுதியில் எரிகாயங்களுக்குள்ளான 2 பிள்ளைகளின் தாயார் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
கணவன் அடுப்படியில் பெற்றோல் போத்தலை வைத்துள்ளார். இதை அறியாமல் தீக்குச்சியை அணைக்காமல் போட்டதால் தீ பற்றியுள்ளதாக இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
கட்டைக்காடு, முள்ளியானைச் சேர்ந்த யோகேஸ்வரன் பாலரஞ்சிதா (வயது- 32) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தார்.
கடந்த 22ஆம் திகதி எரிகாயங்களுக்கு உள்ளான அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
5 நாள்கள் முன்னெடுக்க சிகிச்சையில் குறித்த பெண் நேற்று காலை உயிரிழந்தார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.
Post a Comment