இலங்கைக்கு பெருமை சேர்த்த மாணவி.
021 சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் இலங்கை மாணவி வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கேகாலை புனித ஜோசப் பெண்கள் கல்லூரி மாணவி சுமது சேனாதீரா இந்த திறமையை வெளிப்படுத்தியதாக இலங்கை உயிரியல் நிறுவனம் அறிவித்தது.
கொவிட் தொற்றுநோய் காரணமாக, இந்த ஆண்டு போட்டிகள் ஜூலை 18 முதல் 23 வரை போர்த்துகலின் லிஸ்பனில் இருந்து ஒன்லைனில் நடைபெற்றது. கோட்பாட்டு மற்றும் நடைமுறை சோதனைகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டன.
சுமது சேனாதீராவுக்கு மேலதிகமாக, காலி சங்கமித்த பெண்கள் கல்லூரியின் மெத்மா விஜேசிங்க, கொழும்பு ஆனந்த கல்லூரியின் பமோடா பெரேரா மற்றும் கண்டி புஷ்பதான பாலிகா வித்தியாலயத்தின் ருச்சினி நிர்த்தனா ஆகியோர் இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் என்பது உலகம் முழுவதும் உயிரியல் படிக்கும் மாணவர்களுக்கான முதன்மையான போட்டியாகும். இதில் 70 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குழு கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment