Header Ads

test

உயிரிழந்த மலையக சிறுமியின் தாயார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

  ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர், தனது மகளை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கியுள்ளதாக, உயிரிழந்த ஹிஷாலினியின் தாய் ஆர்.ரஞ்ஜனி கூறியுள்ளார்.

கண்டியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் தெரிவித்தார்.

அங்குள்ள இளைஞர் ஒருவர் தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி வருவதாக, தனது மகள் தொலைபேசியூடாக தனக்கு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

இதன்போது, தனது மகளிடம் இருந்து தொலைபேசியை பறித்து, ரிஷாட் பதியூதீனின் மனைவியை ஹிஷாலினி எதிர்த்து பேசுவதாக, இளைஞன் ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தனது குழந்தையை அடிக்க வேண்டாம் என தான் ரிஷாட் பதியூதீனின் மனைவியிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்புரிய முடியாதென தனது மகள் இறுதியாக தன்னிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தான் பெற்ற கடனை, மீள செலுத்துவதற்காகவே ஹிஷாலினி, ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு பணிப் பெண்ணாக சென்றது என அவரது தாயார் தெரிவித்தார்.


No comments