ரிஷாத் பதியுதீனுக்கு உணவு எடுத்துச் சென்றவருக்கு ஏற்பட்ட நிலை.
டயகம சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பில் தடுப்புக்காவலில் இருந்த ரிஷாத் எம்.பிக்கு உணவு எடுத்துச்சென்றவரிடம் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளதாகக் கொழும்பு குற்றவியல் விசாரணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக் குள்ளான சிறுமி உயிரி ழந்த சம்பவம் குறித்து ரிஷாத்தின் சகோதரர் ரியாத் பதியுதீனின் நெருங்கிய உறவினரிடம் ஐந்து மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் குற்றவியல் விசாரணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரிஷாத்தின் சகோதரர் ரியாத் பதியுதீனின் நெருங்கிய உறவினரான புத்தளம் மற்றும் வெள்ளவத்தைப் பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரிடமே வாக்குமூலத்தைப் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
சுமார் மூன்று மாத காலத்துக்கு மேலாக தடுப்புக் காவலில் இருந்த ரிஷாத் பதியுதீனுக்கு குறித்த நபர் ரிஷாத்தின் வீட்டுக்குச் சென்று உணவு எடுத்துச் சென்றமை தெரியவந்ததை அடுத்து அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment