Header Ads

test

பயணக்கட்டுப்பாட்டில் உள்ள குறைபாடுகள் காரணமாக கோவிட் நான்காவது அலை.

 பயணக் கட்டுப்பாட்டில் உள்ள குறைபாடுகள் காரணமாக இலங்கை நான்காவது கொவிட் அலையின் ஆரம்பத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த சங்கத்தின் தலைவர், விஷேட வைத்தியர் பத்மா குணரத்ன மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் தொற்றாளர்கள் கணிசமான அளவு இனங்காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதனால் நாடு 4 ஆவது அலையை நோக்கி நெருங்கிக் கொண்டிருப்பதை இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் உணரக்கூடியதாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments