Header Ads

test

சிறுமி ஹிஷாலினியின் உடலம் சற்றுமுன் தோண்டி எடுப்பு.

 நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட மருத்துவ குழுவினர் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த மேலும் 11 பெண்களில் ஐவரிடம் நேற்று முன்தினம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.


No comments