அரிசியின் விலையில் மாற்றம் - அமைச்சர் பந்துல குணவர்த்தன.
அரிசி விலைகளை இந்த வாரத்தில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசியை 88 ரூபா என்ற சில்லறை விலைக்கு நுகர்வோருக்கு சதொச ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசியை 92 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் நாட்டரிசியை 97 ரூபா என்ற விலைக்கும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
Post a Comment