Header Ads

test

படுக்கையில் உயிர் பிரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் - யாழில் சம்பவம்.

 யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரின் தங்குமிடத்திலுள்ள படுக்கையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டார். அநுராதபுரத்தை சேர்ந்த சார்ஜண்ட் ஜயசேகர (45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு கடமையை முடித்து விட்டு யாழ், பண்ணையிலுள்ள பொலிஸ் தங்குமிடத்திற்கு சென்று உறக்கத்திற்கு சென்றார்.

அதன்பின்னர், இன்று காலையில் கடமைக்கு செல்வதற்காக காலை 5.30 மணியளவில் சக பொலிஸ் உத்தியோகத்தர்களால் தட்டியெழுப்ப முயன்ற போது, அவர் உயிரிழந்திருந்தமை தெரியவந்தது.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments