ஜனாதிபதி கோத்தாவின் அதிரடி உத்தரவு.
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அதற்காக இன்று மற்றும் நாளை ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கொழும்பில் இருக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக ஆளும் கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
கொழும்பில் தங்கியிருந்து இரண்டு நாள் விவாதங்களில் கலந்து கொண்டு பிரேரணையை தோல்வியடைய செய்வதற்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை தோல்வியடைய செய்வதற்கு ஸ்ரீரலங்கா சுதந்திர கட்சி உட்பட ஆளும் கட்சியினர் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment