Header Ads

test

ஆலயம் சென்று வீடுதிரும்பிய ஆசிரியருக்கு ஏற்பட்ட அவல நிலை.

  திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பலியாகியுள்ளார்.

அத்துடன் அவரது கணவர் மூதூர் வைத்தியசாலையிலும், 7வயதான குழந்தை திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முச்சக்கர வண்டியில் வெருகல் முருகன் கோவிலுக்கு சென்று திரும்பி வருகின்றபோது கார் ஒன்று கட்டுப்பாட்டை மீறி முச்சக்கர வண்டியின்மீது மோதி இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் திருமதி. பாமதி ஞானவேல் (49) (T/T/St Lady of Loudes R.C.V Paalaiyoothu) என்பவரே உயிரிழந்துள்ளார். மேலு ம் இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சேருவில பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






No comments