Header Ads

test

இராணுவத்தளபதி விடுத்துள்ள விசேட அறிவித்தல்.

 கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இனம் காணப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் - வடமராட்சி வடக்கு கிராமசேவகர் பிரிவு நேற்று விடுவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இலங்கையில் தற்போது எந்தவொரு பகுதியும் தனிமைப்படுத்தலின் கீழ் இல்லை என்று கொவிட் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டின் அனைத்துப் பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments