நாட்டை முழுமையாக திறப்பது தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பின் நாட்டை மூடி வைக்கும் எண்ணம் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று 26ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாத நிறைவில் மேலும் 10.5 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த தடுப்பூசிகளை ஏற்றினால் 80% தடுப்பூசி ஏற்றப்பட்டு முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டை முடக்கி வைத்திருந்ததே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் எனவும் ஜனாதிபதி இதன்போது அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.
Post a Comment