Header Ads

test

சைக்கிளில் சென்றவர் திடீர் மரணம் - முல்லைத்தீவில் சம்பவம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முள்ளியவளை பகுதியில் சைக்கிளில் சென்றவர் தீடிரென வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

முள்ளியவளை மூன்றாம் வட்டாரத்தை சேர்ந்த 74 வயதுடைய நடராசா சிவராசா என்பவரே சைக்கிளில் பயணிக்கும்போது திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று (26) இரவு குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவரின் உடலானது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் PCR பரிசோதனையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கபடவுள்ளது.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments