எரிபொருளின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும், கடந்த வாரத்திற்குள் மாத்திரம் 2 சதவீத விலை உயர்வை காண்பிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால், பிரேன்ட் வகையிலான கச்சாய் எண்ணெய் பரல் ஒன்றின் விலை 75 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
கேள்வியை விடவும் நிரம்பல் குறைந்தமை, கொவிட் தடுப்பூசி பணிகள் காரணமாக தொற்று தாக்கம் குறைந்திருப்பதுவும் இதற்கு காரணமென சுட்டிக்காட்டப்படுகின்றது.
எவ்வாறாயினும் உலக சந்தையில் ஏற்பட்ட எண்ணெய் விலையின் தாக்கமானது, இலங்கை உள்நாட்டுச் சந்தையில் விலை அதிகரிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment